×

”வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு? - அன்றே கணித்த அஜித்” டிவிட்டர் ட்ரெண்டிங்கில் #அன்னைத்தமிழில்அர்ச்சனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படியில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிந்த பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை குறிப்பிடும் வகையில் நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பாடலை பகிர்ந்து அதனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக “தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு? என்ற வரிகள் வரும் பாடல் பகுதியை மட்டும் இணையவாசிகள் பகிர்ந்து பெருமைக் கொள்கின்றனர். மேலும் #அன்னைத்தமிழில்அர்ச்சனை என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Tags : Arson ,AGIT ,Twitter , Why Archana in another language? - Ajith predicted on that day ”on Twitter trending
× RELATED மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறக்கம்...