காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தன் அவர்களுக்கும் - தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>