×

மத்திய மண்டலத்தில் 98 சதவீத கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் சாதனை: அதிக அளவு தடுப்பூசி செலுத்தியதில் 4 வது இடத்தில் திருச்சி

திருச்சி: 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 4வது இடத்தில் உள்ளது. இதை தவிர்த்து 98 சதவீத கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 16ம் தேதி வரை 2 கோடியே 49 லட்சத்தி 88 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2கோடியே 49 லட்சத்தி 33 ஆயிரத்து 196 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 8.76 லட்சம் சுகாதார பணியாளர்கள், 11.59 லட்சம் முன்கள பணியாளர்கள், 18 முதல் 44 வயது வரை உள்ள 1.06 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ள 80.68 லட்சம் பேர், 60வயதுக்கு மேற்பட்ட 42.12 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி வழங்கப்பட்ட தடுப்பூசியில் 100 சதவீத தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதில் திருச்சி மாவட்டத்தில் 9,32,769 பேருக்கும், புதுக்கோட்டைத்தில் 2,92,428 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 3,49,522 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,25,982 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2,01,096 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,20,788 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3,84,604 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 2,28,003 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,34,241 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொடுப்பட்ட பட்ட தடுப்பூசிகளை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 4வது இடத்தில் உள்ளது.இதைத்தவிர்த்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் அரியலூர் சாதனை படைத்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7190 கர்ப்பிணி பெண்களில் 7023 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 98 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் மத்திய மண்டலத்தில் உள்ள 5 சுகாதார மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 6993 கர்ப்பிணி பெண்களில் 4628 பேருக்கும், அறந்தாங்கியில் 7682 பேரில் 4792 பேருக்கும், புதுக்கோட்டையில் 10,156 பேரில் 5551 பேருக்கும், நாகையில் 6233 பேரில் 3176 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதை தவிர்த்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5798, தஞ்சாவூரில் 5448, அறந்தாங்கியில் 3877, புதுக்கோட்டையில் 3268, திருவாரூரில் 2873, பெரம்பலூரில் 2798, அரியலூரில் 2416, மயிலாடுதுறையில் 2009, நாகையில் 1756, திருச்சியில் 1721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.அதிக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் 10 மாவட்டங்களில் மத்திய மண்டத்தில் உள்ள 5 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

Tags : Ariyalur ,Central ,Trichy , 98 percent of pregnant women in the Central Zone Ariyalur record for vaccination: Trichy ranks 4th in highest number of vaccines
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...