×

கொடைக்கானலில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்: பொதுமக்கள் நிம்மதி

கொடைக்கானல்:கொடைக்கானல் நகர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. அக்குரங்குகள் வனத்துறை மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.குளுகுளு நகரானா கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவர். கொரோனா ஊரடங்கால் தற்போது சுற்றுலா இடங்களுக்கு தடை நீடித்தாலும், சுற்றுலாப் பயணிகள் மலைகளின் இளவரசியை ரசிக்க அதிகம் செல்கின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் கொடைக்கானல் சென்மேரிஸ் சாலை பகுதியில் குரங்குகள் குடியிருப்பு பகுதியில் அதிக தொல்லை கொடுப்பதாக வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். வனத்துறை வனவர் அழகுராஜா கூறியதாவது: கொடைக்கானல் நகர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வந்தது. இதுகுறித்து வந்த புகாரின்பேரில், கூண்டு வைத்து குரங்குகள் பிடிக்கப்பட்டது.இதேபோல பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் நிலையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிகள் விடப்படும் இவ்வாறு அவர் கூறினார். என்றார்.


Tags : Kodaikanal , Caged monkeys in Kodaikanal: Public relief
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்