×

பாகிஸ்தானில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை 4வது முறையாக உடைப்பு : சிறுபான்மையினர் மீதான சகிப்பின்மை அதிகரிப்பு என இந்தியா கண்டனம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டில் லாகூர் நகரில் நிறுவப்பட்டுள்ள சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் தெஹ்ரிக்- ஏ- லபாயக் பாகிஸ்தான் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினர் உடைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் மகாராஜா ரஞ்சித் சிங் 19ம்  நூற்றாண்டின் முதல் பாதி வரை வடமேற்கு இந்திய துணை கண்ட பகுதிகளை ஆண்டவர் ஆவார். சீக்கிய பேரரசின் முதல் அரசரான ரஞ்சித் சிங்கின் சிலை கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நிறுவப்பட்டது.

தற்போது 4வது முறையாக சிலை உடைக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் சிலை உடைப்பு நிகழ்வு பாகிஸ்தானில் சகிப்புத் தன்மை இன்மை அதிகரித்து வருவதையும் சிறுபான்மை சமூகத்தின் மீதான மதிப்பு பாகிஸ்தான் சமூகத்திடம் குறைந்து வருவதையும் காட்டுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.பாகிஸ்தானில் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான வன்முறை மற்றும் வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் தனிநபர் சொத்துகள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இந்து கோவில் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில், தற்போது சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ranjit Singh ,Pakistan ,India , ரஞ்சித் சிங்
× RELATED மாணவர்கள் அமைப்பினர் தீவிரம்...