சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் இருந்து அவரது கணவர் சசிதரூரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் இருந்து அவரது கணவர் சசிதரூரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் 2014, ஜனவரி 17ம் தேதி உயிரிழந்தார். டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உயிரிழந்த சுனந்தா மரணத்தில் மர்மம் உள்ளதாக போலீஸ் வழக்கு பதிந்தனர்.

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவர் சசிதரூரையும் சேர்த்து டெல்லி போலீஸ் வழக்கு பதிந்தது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சசிதரூர் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், சசிதரூரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

டெல்லியிலுள்ள சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் லீலாவதி பாலேசின் 345ஆம் எண் கொண்ட அறையில் 17 ஜனவரி 2014 அன்று உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். காவல் துறை வழக்கு பதிவு செய்து, மருத்துவ உடற்கூறாய்வு அறிக்கையின்படி, சுனந்தா புஷ்கர், அதிக போதை மாத்திரைகள் உட்கொண்டதால் இறந்தார் என அறிவித்து வழக்கை முடிவு கட்டியது. இவ்வழக்கை மீண்டும் டிசம்பர் 2014 முதல் டெல்லி காவல்துறை மறுவிசாரணை செய்து, சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்ற முடிவில் கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தியது.

Related Stories:

>