×

பாராலிம்பிக்ஸில் பங்கேற்க டோக்கியோ புறப்பட்டது இந்திய குழு!: மீண்டும் தங்கம் வெல்வேன் என மாரியப்பன் உறுதி..!!

டெல்லி: மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய குழுவின் முதல் பிரிவு நள்ளிரவு டோக்கியோ புறப்பட்டது. கோடைகால ஒலிம்பிக்ஸை தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளையும் ஜப்பான் நடத்துகிறது. அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 24ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 4,400 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 14 பெண்கள் உட்பட 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.

இந்த அணிக்கு தலைமை ஏற்கும் தமிழ்நாட்டு மாரியப்பன் உள்ளிட்ட அணியின் முதல் முழு அதிகாலை டெல்லியில் இருந்து டோக்கியோ புறப்பட்டது. இதையொட்டி விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன், மீண்டும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார். ஈட்டு எரிதலில் பங்கேற்கும் தேக்ஷன்த், வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் உள்ளிட்டோருடன் இந்திய பாராலிம்பிக்ஸ் அமைப்பினரும் டோக்கியோ சென்றனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்திச்செல்ல உள்ளார். இந்த பெருமையை பெரும் முதல் தமிழக வீரர் மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஒலிம்பிக்சில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Tokyo ,Paralympics ,Mariappan , Alternative Talent, Paralympics, Indian Team, Tokyo
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்