×

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது.. 10,000 பேர் படுகாயம்; 60,000 வீடுகள் இடிந்து விழுந்தன; 76,000 வீடுகள் சேதம்!!

லெஸ் கயாஸ்: ஹைதியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,941ஆக அதிகரித்துள்ளது. ஹைதியில் கடந்த சனியன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 9,900 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சேதமடைந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் காயமடைந்த பலர் திறந்த வெளியில் காத்துக்கிடக்கின்றனர். சுமார் 60,000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், 76,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தேவாலயம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Haiti , ஹைதி
× RELATED ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால்...