அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாதது போன்ற தோற்றம் ஏற்படுத்த முயற்சி: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்தில் அரூர் சம்பத்குமார் (அதிமுக) :  மின்சாரத்துக்கும் திமுக அரசுக்கும் ரொம்ப பொருத்தமாக உள்ளது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் தடை ஏற்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி:

2016 தேர்தல் வாக்குறுதியில் முந்தைய ஆட்சியாளர்கள் 13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். 2016-21ல் 15,554 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. புதிய மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வந்து கூடுதல் மின்நிறுவு திறன் ஏற்படுத்தியது போன்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். மின் மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறி கொண்டு வரும் நீங்கள், 2006-11ல் 2 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகளுக்கு திமுக ஆட்சி காலத்தில் மின் இணைப்பு கொடுத்தனர்.

தமிழ்நாட்டில் மின் இணைப்புக்காக காத்திருக்க கூடிய விவசாயிகள் 4.52 லட்சம் பேர் காத்துள்ளனர். அப்படிபட்ட சூழலில் எப்படி மின் மிகை மாநிலம் என்று கூறினீர்கள். கடந்த 9 மாதங்களில் எந்த வித பராமரிப்பு பணி எடுக்கவில்லை. பராமரிப்பு பணிகள் 2.30 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. செய்து முடிக்கப்பட்ட பணிகள் 2.22 லட்சம் தான். ரூ.625 ேகாடி மதிப்பில் 8,900 மின் மாற்றிகள் மாற்றப்படவுள்ளது. தற்போது கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மின்வாரியத்தை பொறுத்தவரையில் மின் மிகை மாநிலம் என்கிற கூற்று தவறானது. மின் மிகைமாநிலமாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 சம்பத்குமார் (அதிமுக) : கடந்த 10 ஆண்டுகளில் மின் தட்டுபாடு இல்லை. கரண்ட் கட் ஆகவில்லை. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வுக்கு போன போது 5 ஆண்டுகள் கரெண்ட் பில்லாத கட்டாதவர்கள் இப்போது ரூ.320 கட்டணம் கட்டியுள்ளனர். மின்கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி :2020யை காட்டிலும் 2021ல் 1479 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டன. கடந்த ஆட்சியில் மின்வெட்டு இல்லாத போது, பேசுகின்றனர். 2020 மே மாதம் 30 நிமிடங்களுக்கு 6841 எண்ணிக்கை ஆகும். 2020 ஜூன் மாதம் 4698, 2020  ஜூலை 5190 எண்ணிக்கை ஆகும். இது, 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்ட எண்ணிக்கை தான்.

Related Stories:

More
>