அர்ச்சகர்களுக்கு எதிரான அரசை போல் சித்தரிப்பு: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: மயிலாப்பூர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார். இந்த விஷயத்தில் ஒரு சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை செய்து வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வை, அடுத்த தலைமுறையின் கட்டமைப்பு மிக உறுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில ஊடகங்கள், திமுக அரசு ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரானதுபோல் சித்தரிக்கிறார்கள். பதவியேற்ற 3 மாதத்தில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories:

>