×

மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.  வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 எம்பி பதவிகள் காலியாக உள்ளன. 3 தேர்தலையும் தனித்தனியாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது ஒரு எம்பி பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 எம்பி பதவிகளையும் அதிக எம்எல்ஏக்கள் ெகாண்ட கட்சி என்பதால் திமுகவே கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.


தேர்தல் அறிவிக்கையை வெளியிடும்
 நாள்  மற்றும் வேட்புமனுக்களை
தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்            24.08.2021 (செவ்வாய்)     

வேட்பு மனுக்களை தாக்கல்
செய்வதற்கான கடைசி நாள்                31.08.2021 (செவ்வாய்)    

வேட்பு மனுக்களை பரிசீலனை
செய்யும் நாள்                    01.09.2021 (புதன்)    
 
வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்
கொள்வதற்கான கடைசி நாள்                03.09.2021 (வெள்ளி)

வாக்குப்பதிவு நாள்                    13.09.2021 (திங்கள்)    

வாக்குப்பதிவு நேரம்                    காலை 9 மணி முதல்
                        மாலை 4 மணி வரை    

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்            13.09.2021 (திங்கள்)
                        மாலை 5 மணி முதல்    

தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள்            15.09.2021 (புதன்)

Tags : Chief Electoral Officer , State Legislature, MP, Petitioner, Chief Electoral Officer
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...