திருவள்ளூர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண் ஊழியர் சாவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த பெண் சுருக்கெழுத்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் நீதிமன்ற ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சரஸ்வதி (52). இவர் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் நீதிமன்ற பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கையிலிருந்து விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த நீதிமன்ற ஊழியர்கள் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>