திமுக கொடி கம்பத்தை அகற்றிய அதிமுக ஊராட்சி செயலாளர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (42). அதிமுக ஊராட்சி செயலாளர். இவரது மனைவி சுகுணாவதி. சோம்பட்டு ஊராட்சி தலைவர். அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி தயாளன் மற்றும் ராஜாராம் இடையே கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயில் அருகே அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்கள் அருகே அந்தந்த கட்சியைச் சேர்ந்த நிகழ்ச்சிகளில் கட்சியினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த 15ம் தேதி  காலை சுதந்திர தினத்தன்று ராஜாராம் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து கொடிக்கம்பங்களை இடித்து தள்ளியுள்ளார். இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த  திமுக நிர்வாகி வேலு(32), கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ராஜாராம் மீது புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாராமை அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories:

More