×

ஷமி, பும்ரா, சிராஜ் சூப்பர்... கோஹ்லி பாராட்டு

லார்ட்ஸ் டெஸ்டின் பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் 272 ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியை 120 ரன்னில் சுருட்டிய இந்தியா, 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: மொத்த அணி குறித்து ரொம்ப பெருமையாக இருக்கிறது. நாங்கள் போட்ட திட்டப்படி செயல்பட்டோம். முதல் 3 நாட்கள் களம் கடினமாக இருந்தது. அதிலும் முதல் நாள் ரன் குவிப்பதில் கடும் சவாலை எதிர்கொண்டோம். 2வது இன்னிங்சில், நெருக்கடியான கட்டத்தில்  ஷமி, பும்ரா இருவரும்  மிகவும் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்து அணியை 60 ஓவருக்குள் சுருட்ட முடியும் என நம்பினோம்.  

பதட்டமான சூழலும் எங்களுக்கு சாதகமாக மாறியது. அதிலும் ஷமி, பும்ரா பங்களிப்பால் எங்கள் கை உயர்ந்தது. பேட்டிங் பயிற்சியாளர் கடுமையான உழைப்பை தந்துள்ளார். நாங்கள் நம்பர் 1 அணியாக இருந்தபோது பின்வரிசையில் கணிசமான ரன் குவிக்கப்பட்டது. இடையில் அதிலிருந்து விலகியிருந்தோம். இப்போது மீண்டும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் முனைப்புடன் விளையாடத் தொடங்கி உள்ளனர். அவர்கள் குவித்த ரன் எவ்வளவு விலை மதிப்பற்றவை என்பது எங்களுக்கு தெரியும். முன்பு டோனி தலைமையில் கிடைத்த வெற்றியின்போது  நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அது மிகவும் சிறப்பானது.

ஆனால் இந்த வெற்றி 60 ஓவருக்குள் நிகழ்ந்திருக்கிறது. முக்கியமாக சிராஜ். லார்ட்ஸ் அரங்கில் முதல்முறையாக விளையாடும் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நல்ல தொடக்கம் இது. அரங்கில் கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் விளையாடும் போது இதுபோன்ற ஆதரவு முக்கியமானது. சுதந்திர தினம் முடிந்து மறுநாள் கிடைத்த இந்த வெற்றி, ரசிகர்களுக்கு நாங்கள் தரும்  மிகச்சிறந்த பரிசாகும். வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடப்போவதில்லை. அடுத்து வரும் போட்டிகளில் முழு கவனம் செலுத்துவோம்.

Tags : Shami ,Bumra ,Siraj ,Kohli , Shami, Bumra, Siraj Super ... Kohli praise
× RELATED காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி