எல்.முருகனுக்கு கருப்புக்கொடி

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், மக்கள் ஆசி யாத்திரையாகவும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று சென்றார். இவர்கள் வருகையை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் பஸ் நிலையத்தில் கருப்புக்கொடியுடன் காத்திருந்தனர். அப்போது  அங்கு வந்த பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதித்தமிழர் கட்சியின் கருப்புக்கொடி போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அவர்கள் கையில் இருந்த கருப்புக்கொடியை பறித்து உடைத்து வீசி எறிந்தனர். மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் கருப்புக்கொடி காட்ட முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>