×

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் ரூ50 ஆயிரம் விலைபோன மாடுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருபுவனை: மதகடிப்பட்டு வாரச்சந்தையில் இன்று ஒரு மாட்டின் விலை ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு காய்கறி, மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதில், காலை 5 மணி முதல் 11 மணி வரை மாடுகள் விற்பனை நடைபெறும். தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரு மாட்டின் விலை ரூ.50 ஆயிரம் வரை விலை போனது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா காலமென்பதால் வியாபாரிகள், விவசாயிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி சந்தை இயங்கியது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Madakadipattu , Cows worth Rs 50,000 at Madakadipattu weekly market: Farmers happy
× RELATED மதகடிப்பட்டு பிரெஞ்சு வாய்க்காலில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்