சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த உற்சவம்: பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்

மதுரை: சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த உற்சவத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுக்கு மண் சுமந்த உற்சவம் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. நான்கு அடி வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சியுடன்: திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். வருகின்ற 19ம் தேதி காலை பொதுமக்கள் தரிசனத்திற்கு கோயில் வளாகத்திற்குள் அனுமதி இல்லை. 19ம் தேதி மட்டும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய மாலை 4 மணி - இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிறு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>