×

அத்திவரதருக்கு விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் கணக்கீடு செய்யாமல் வாங்கியதில் ஊழல்?.. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின்போது அத்தி வரதருக்கு உடுத்தப்பட்ட  பட்டு வஸ்திரங்களில் முறைகேடு ஈடுபட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்தி வரதர், 1979-ம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார். அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. இந்த விழா கடந்த 2019-ம் ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினந்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 48 நாட்களுக்கும் அத்தி வரதர் வைபவத்தில் அத்திவரதருக்கு பல்வேறு வண்ணங்களில் விலை உயர்ந்த பட்டு அஸ்திரங்கள் பொருத்தப்பட்ட பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்வாறு விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் உடுத்த பட்ட வஸ்திரங்கள் எவ்வளவு கணக்கிடப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தகவல் உரிமை சட்டம் கீழ் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த கோவில் நிர்வாகம் சார்பில் திருக் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், அத்தி வரதர் தரிசனத்திற்கு பின் கோவிலிலிருந்து பாதுகாப்பாக பொதுமக்களை கோவில் வெளியே அனுப்பும் பணியில் அனைத்து அரசு அலுவலகம் ஈடுபட்டுள்ளதால் திருக்கோவில் அன்றாட பணிகள் தள்ளி போடப்பட்டிருந்தது; இதனால் வஸ்திரங்கள் கணக்கிடும் பணி தள்ளிப் போடப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார். இதனால் விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் கணக்கீடு செய்யாமல் விலை உயர்ந்த பொருள்கள் மீது ஊழல் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர் டில்லிபாபு தெரிவித்துள்ளார்.

Tags : Attivarathar , Corruption in the purchase of expensive silk garments for Attivarathar without calculation? .. Social activist accused
× RELATED அத்திவரதர் சயன நிலை குளத்தில் மத்திய நீர்வளத்துறையினர் ஆய்வு