அதிமுக மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் உயிரிழப்பு: செப். 13ஆம் தேதி ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முகமது ஜான் மறைவை தொடர்ந்து 3 இடங்களில் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  2021 மார்ச் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் காலமானார். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு ஆக.31 கடைசி நாள் எனவும், செப்.1 வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. செப். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடப்பதால் மூன்றையும் திமுக கைப்பற்றுகிறது. காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் வெவ்வேறு தேதிகளில் முடிவடைவதால் தனிதனியே தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானதால் அவரது இடத்துக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளது.

Related Stories:

More