×

டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயணச்சலுகை பெரம்பலூர் மாவட்டத்தில் தினமும் 16 ஆயிரம் பெண்கள் பயனடைகின்றனர்: கலெக்டர் பேட்டி

பெரம்பலூர்: டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்பட்டதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட த்தில் தினமும் 16ஆயிரம் பெண்கள் பயனடைகின்றனர் என கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்தார்.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிறைவேற்ற ப் பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து நேற்று(16ம்தேதி) கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட் டத்தில் கலெக்டர்  வெங்கட பிரியா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது :தமிழக முதல்வரின் சிறப் புத் திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என் ற திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,466 கோரிக்கை மனுக்கள் பெற ப்பட்டு 3,253 மனுக்களுக்கு த் தீர்வு காணப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், 57 பேருக்கு ரூ13.25 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு ரூ23.10 லட் சம் மதிப்பில் கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை கண்ட றியும் விதமாக வீடுவீடாகச் சென்று தொற்று கண்டறி யும் பணிக்காக 2,134 களப் பணியாளர்கள் நியமிக்கப் பட்டு பணியில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளனர். 578படுக் கை வசதிகளுடன் 4 தற்கா லிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 3,078 காய்ச்சல் கண்டறியும் முகா ம்கள் நடத்தப்பட்டு 67,144 நபர்களுக்கு சளிதடவல்பரி சோதனை மேற்கொள்ளப்ப ட்டது.நோய்த்தடுப்பு நடவடி க்கையாக 4,669 நபர்களுக் கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மாத்திரைகள் வழங்கப் பட்டுள்ளன.பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆக்ஜி ஸன் பற்றாக்குறை ஏற்படா தபடி, புதியதாக ரூ1 கோடி மதிப்பீட்டில்,அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்தி ரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் பற் றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள் ளது. இதுவரை முதல் தவ ணையாக 1,43,469 நபர்களு க்கும், 2வது தவணையாக 22,998 நபர்களுக்கும் கொ ரோனா தடுப்பூசிகள் செலு த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் தவணையாக 726 நபர்களு க்கும், 2வதுதவணையாக 4 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது.

டவுன் பஸ்களில் பெண்க ளுக்கு கட்டணமில்லா பய ணச் சலுகை வழங்கப்பட் டதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் தினமும் 16,6 65பெண்கள் பயன்பெறுகி ன்றனர். மாற்றுத்திறனாளி கள் மற்றும் உதவியாளர், திருநங்கைகள் தினசரி 119 பேர் பயன் பெறுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்ற 612 நபர்களுக்கு ரூ7.59 கோடி காப்பீட்டு நிதியுதவி வழங் கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் 1,84,695 அரிசி பெறும் குடு ம்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ4ஆயிரம் வீதம் ரூ 73.88 கோடி கொரோனா கால நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலு ம், 7.39 கோடி மதிப்பில் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொ குப்பு வழங்கப்பட்டுள்ளது. பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அங் கையர்க்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சுகாதாரத் துறை துணை இ யக்குநர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரி மன்னன், ஊராட்சிகள் உ தவி இயக்குநர் பாரதிதா சன் ஆகியோர் உடனிருந்தனர்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவ சேவை மூலம் மாவட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் 8299 பேருக்கும், ரத்த கொதிப்பு நோயாளிகள் 13625 பேருக்கும், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4202 பேருக்கும் என மொத் தம் 26126 பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்துபொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.



Tags : Perambalur district , Free fare on town buses daily in Perambalur district 16 thousand women benefit: Collector interview
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி