மாரியப்பனுக்கு என்ன உணவு பிடிக்கும் என பிரதமர் மோடி கேள்விக்கு நாட்டுக்கோழி சூப் என தமிழில் பதிலளித்த மாரியப்பன் தாயார்: பாராலிம்பிக் குழுவுடன் உரை

டெல்லி: பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்து வருகிறார். 9 வகையான போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 54 பேர் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். பாரா ஒலிம்பிக் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுடனும் காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாடல் செய்து வருகிறார். மாரியப்பன் தாயார் சரோஜா, அக்கா சுதா,  தம்பிகள் குமார், கோபி ஆகியோருடனும் பிரதமர் உரையாடினார். பிரதமருடான கலந்துரையாடலில் சேலத்தில் இருந்து மாரியப்பன் குடும்பத்தினர் பங்கேற்றனர். மாரியப்பனுக்கு என்ன உணவு பிடிக்கும் என பிரதமர் கேட்டதற்கு நாட்டுக்கோழி சூப் மிகவும் பிடிக்கும் என தாயார் பதில் அளித்தார். மாரியப்பனுக்கு நாட்டுக் கோழி சூப் பிடிக்கும் என பிரதமர் கேள்விக்கு அவரது தாயார் தமிழில் பதில் அளித்தார்.

டோக்கியோவில் ஆக.24 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நன்றி கூறினார், உங்கள் ஊக்கம் இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அதில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்று கூறினார். 2021 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 54 பேர் கொண்ட பாராலிம்பிக் குழுவுடன் உரையாடினார்.

Related Stories: