×

ஆப்கானிஸ்தானில் ஆட்சி பிடித்திருக்கும் தாலிபான்களுடன் ரஷ்ய தூதர் இன்று பேச்சுவார்த்தை..!!

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தாலிபான்களுடன் நட்பை விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள ரஷ்ய தூதுவர், தாலிபான்களுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்வர் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தாலிபான்களின் செயல்பாடுகளை பொறுத்து அவர்களது ஆட்சியை அங்கீகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ஐரோப்பிய யூனியனும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறியுள்ளது. ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்திருப்பது உலக நாடுகளின் தோல்வி என இங்கிலாந்து கூறியுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் தாலிபான்கள் அரசை அங்கீகரித்ததும் குறிப்பிடத்தக்கது. 


Tags : Taliban ,Afghanistan , Afghanistan, Taliban, Russian ambassador, speech
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி