×

நாட்டிலேயே எதிர்கட்சிகள் இல்லாத மாநிலமாக உருவெடுத்தது நாகலாந்து சட்டப்பேரவை..!!

கோஹிமா: நாட்டிலேயே எதிர்கட்சிகள் இல்லாத மாநிலமாக நாகலாந்து உருவெடுத்துள்ளது. நாகலாந்து சட்டப்பேரவையானது மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்டது. அதில் ஒரு எம்.எல்.ஏ. உயிரிழந்ததால் மொத்தம் 59 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் எதிர்க்கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு 25 எம்.எல்.ஏக்கள் கொண்டிருந்தது. இந்நிலையில் நாகா மக்கள் முன்னணி கட்சி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசுடன் இணைந்ததால்  நாகலாந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டிலேயே எதிர்கட்சிகள் இல்லாத மாநிலமாக நாகலாந்து சட்டப்பேரவை உருவெடுத்துள்ளது. நாகாலாந்தில் பாரதிய ஜனதாவின் எதிர்க்கட்சியான என்.பி.எப். மணிப்பூர் மாநிலத்தில் கூட்டணி கட்சியாக உள்ளது. நீஃபியு ரியோ-வின் அழைப்பை ஏற்று ஆளும் கூட்டணி அரசில் இணைந்த என்.பி.எப். அமைதியான மற்றும் இணக்கமான உறவை தொடரவே இத்தகைய முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளது.


Tags : Nagaland Legislative Assembly , Opposition, State, Nagaland Legislatures
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...