நல்லாட்சி தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்று கொங்கு மக்கள் வருந்துகின்றனர்: சேலம் வடக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பேச்சு

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்(சேலம் வடக்கு) பேசியதாவது: தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் மக்கள் பாராட்டுகிறார்கள்.  மாட மாளிகைக்கு அருகே மண் குடிசை வீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக நகர்ப்புற ஏழைகளுக்காக 9,53,446 வீடுகள் கட்ட 3954 கோடியை ஒதுக்கியுள்ளனர். இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு அற்புதமான திட்டமாகும். முதல்வராக பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு அதிக இருந்த நேரம், அப்போது சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா படுக்கைகளை ஏற்படுத்தி தேவையான ஆக்சிஜன் வசதியையும் ஏற்படுத்தி திறந்து வைத்தார்.

இதன் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களை நோயிலிருந்து பாதுகாத்த அரசு திமுக அரசு. நல்லாட்சி தரும் முதல்வருக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருந்தும் நிலையை பார்க்க முடிகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மிளகு பதப்படும் மையம் அமைத்தல், நவீன வேளாண் விற்பனை மையம் அமைத்தல் போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: