×

ஜெயலலிதா மரணம் குறித்த பேச்சு: துணை சபாநாயகர், துரைமுருகன் ஓபிஎஸ் காரசார விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் நிதி, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில், விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது, ‘‘ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, அதுகுறித்து சட்டமன்றத்தில் பேச முடியாது. எனவே, உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி: உறுப்பினர் மேலோட்டமாகத்தான் பேசினார். அதனால், நீக்க முடியாது. அவை முன்னவர் துரைமுருகன்: பொதுவாக சட்டசபையில், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேசக்கூடாது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக பேசுவதில் ஆட்சேபணை கிடையாது. அதை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம்: சுப்ரீம் கோர்ட்டில் அந்த மருத்துவமனை தரப்பில் இருந்து தடையாணை பெறப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி: உறுப்பினர் மேலோட்டமாகத் தான் பேசினார். எனவே, அவர் பேசியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசியதும் அவைக் குறிப்பில் இருக்கும். இவ்வாறு விவாதம் தொடர்ந்து நடந்தது.

Tags : Jayalalithaa ,Deputy Speaker ,Thuraimurugan ,Karasara , Jayalalithaa, death
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...