வேலூர் விஐடியில் முப்பெரும் விழா இந்தியர்களின் சேமிப்பு பழக்கமும் உழைப்பும் நாட்டை வல்லரசாக்கும்: ஜி.விசுவநாதன் பேச்சு

சென்னை: வேலூர் விஐடியில் நேதாஜி பிறந்தநாள் விழா, பாரதியார் நினைவு  விழா மற்றும் சுதந்திர தின விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.05 டிரில்லியன் டாலர். இதை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல், தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும். இதை சாத்தியமாக்க அனைவருக்கும் உயர்கல்வியை உறுதி செய்ய செய்ய வேண்டும். உலகளவில் இந்தியாவில்தான் சேமிப்பு பழக்கம் அதிகம் உள்ளது.

அதேபோல் இந்தியர்கள் கடினமாக உழைக்க கூடியவர்கள். இவை இரண்டும் இந்தியாவை வல்லரசாக உயர்த்தும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தேசிய சிந்தனைக்கழகம் மற்றும் விஐடி இணைந்து நடத்திய புகைப்பட கண்காட்சியை வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் காணொளி காட்சி மூலம் புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்டு பேசினார். விழாவில் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கொடாலி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More