பொன்விழா ஆண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கிய பெட்ரோல் பங்க்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் கடந்த 1971ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க், பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. 1000க்கும் மேற்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் இங்கு வந்து பெட்ரோல் போட்டு செல்கின்றன. மேலும் இந்த பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு இலவசமாக ஆயில் மாற்றி தருவதுடன் கூடுதலாக ரூ.50க்கு பெட்ரோலும் தரப்படுகிறது. இந்நிலையில் பொன்விழா ஆண்டு கொண்டாடி வரும் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவன பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல், டீசல் போடுவதற்காக வந்த வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக 25 லிட்டர் ஆயில் கேன் மற்றும் பரிசு பொருட்களை பாரத் பெட்ரோலியம் கார்பெரேஷன் நிறுவன பொதுமேலாளர் இந்திரஜித்சிங் வழங்கினார்.

உடன், சென்னை கோட்டமேலாளர் குருராஜ்சங்க், முதுநிலை விற்பனை மேலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>