ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது  நினைவிடத்தில் இருந்து ராஜிவ் ஜோதி, டெல்லிக்கு கொண்டு சென்று, ஆகஸ்ட் 20ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைப்பது வழக்கம். இதையொட்டி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இருந்து ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்க விழா நேற்று நடந்தது. யாத்திரை குழு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில், எம்எல்ஏ செல்வபெருந்தகை, எம்பி விஜய் வசந்த், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜ், ஸ்ரீபெரும்புதூர் நகரத் தலைவர் அருள்ராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஜோதி யாத்திரையை துவக்கி வைத்தனர்.

Related Stories:

>