லாரி மோதி பைக்கில் சென்ற தூய்மை பணியாளர் பலி

புழல்: தாமரைப்பாக்கம் அருகே உள்ள கோடுவெளி காரணி கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானமூர்த்தி (42). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கோடுவெளியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பழைய அலமாதி ஈஸ்வரன் கோயில் அருகே பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிசிவஞானமூர்த்தி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Related Stories: