×

மகிளா காங்கிரஸ் தலைவி திரிணாமுலில் ஐக்கியம்

புதுடெல்லி: மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுஷ்மிதா தேவ், தனது பதவியை ராஜினாமா செய்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி சுஷ்மிதா தேவ். இவர் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் அனைத்து இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு சுஷ்மிதா தேவ் முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர், தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில், கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அசாம் காங்கிரஸ் தலைவர்களுடன் கடந்த சனியன்று கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராஜினாமா கடிதம் அனுப்பிய ஒரு சில மணி நேரத்துக்கு பின், சுஷ்மிதா தேவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜியை தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து திரிணாமுலில் அவர் முறைப்படி இணைந்தார். மேலும் அவர் மேற்கு வங்க முதல்வரையும் சந்திப்பதாகவும் திரிணாமுல் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் தனது சில்சார் மக்களவை தொகுதியில் பாஜவின் ரஜ்தீப் ராயிடம் சுஷ்மிதா தேவ் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கபில்சிபல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், ‘‘இளம் தலைவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் பழைய தலைமுறையினர் கட்சியை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காங்கிரஸ் கண்களை மூடிக்கொண்டு நகர்கிறது” என விமர்சித்துள்ளார்.

Tags : Mahila ,Congress ,Trinamool , Mahila Congress leader unites in Trinamool
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர்...