×

2வது இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்

லண்டன்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 27 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்திருந்தது. பன்ட் 14, இஷாந்த் 4 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பன்ட் 22 ரன், இஷாந்த் 16 ரன் எடுத்து ராபின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 209 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில், ஷமி - பும்ரா ஜோடி 9வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 89 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன் (70 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), பும்ரா 34 ரன்னுடன் (64 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வுட் 3, ராபின்சன், மொயீன் தலா 2, சாம் 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் பர்ன்ஸ், சிப்லி இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். ஹமீத் 9, பேர்ஸ்டோ 2 ரன்னில் வெளியேற, கேப்டன் ரூட் 33 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் கோஹ்லி வசம் பிடிபட்டார். இங்கிலாந்து 67 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

Tags : England , England stumbled in the 2nd inning
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து