நேஷனல் பேங்க் ஓபன் கமிலா ஜார்ஜி சாம்பியன்

மான்ட்ரியால்: கனடாவில் நடந்த  நேஷனல் பேங்க்  ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீராங்கனை கமிலா ஜார்ஜி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (6 வது ரேங்க், 29 வயது) மோதிய கமிலா ஜார்ஜி (71வது ரேங்க், 29 வயது) 6-3, 7-5 என நேர் செட்களில் வென்று சாம்பியனானார். இந்த ஆட்டம் 1 மணி, 40 நிமிடங்கள் நடைபெற்றது. கமிலா வென்ற 3வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது. மெட்வதேவ் அசத்தல்: டொரான்டோவில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் (2வது  ரேங்க்), அமெரிக்க   வீரர் ரெய்லி ஒபெல்கா (23வது ரேங்க்) மோதினர். முன்னணி வீரரான மெட்வதேவ் அதிரடியாக விளையாடி 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் ஒரு மணி, 25 நிமிடங்கள் நடந்தது. ஆடவர் இரட்டையர் பிரிவில்  ராஜீவ் ராம் (அமெரிக்கா) - ஜோ சாலிஸ்பெரி (பிரிட்டன்) ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) - லுயிசா ஸ்டெபானி (பிரேசில்) ஜோடியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.

Related Stories: