பெரும்பான்மை இழந்ததால் மலேசிய பிரதமர் முகைதீன் ராஜினாமா: கொரோனாவை கையாள்வதில் தோல்வி அடைந்ததால் சிக்கல்

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்துள்ளார். மலேசியாவில் பிரதமராக இருந்த மகதீர் முகமது(96) கடந்த ஆண்டு பதவி விலகினார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முகைதீன் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். இதனிடையே கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். மோசமான நிர்வாகம், தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு விருப்பமின்மை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

மேலும் இவருக்கு நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவருக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி எம்பிக்கள் 12க்கும் மேற்பட்டோர் திரும்ப பெற்றதால் அவர் பெரும்பான்மையை இழந்தார். மேலும் இரண்டு எம்பிக்களும் கடந்த வாரம் யாசினுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து மலேசிய மன்னரை சந்தித்து பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மலேசியாவில் முகைதீனின் கடந்த 18 மாத ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. யாசின் திடீரென பதவி விலகி இருப்பதால் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது

Related Stories: