திமுகவின் 100 நாள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்றார். அங்கு தோஷ பரிகாரம் செய்துகொண்ட இவர், 27 நட்சத்திர சிவலிங்கங்களுக்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், திமுகவின் 100 நாள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக உள்ளது. இது தொடர வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை பொதுமக்களும், அர்ச்சகர்களும் ஏற்றுக்கொண்டால் தேமுதிகவும் ஏற்கும். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் அதனை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: