×

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் கள ஆய்வு; சிறுத்தைகள் நெருக்கமான வாழ்விடத்தில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சரணாலயம் முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

களக்காடு: இந்தியாவில் 20 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, சிறுத்தைகள் ெநருக்கமாக வாழும் இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 100 ச.கி.மீட்டருக்கு 21 சிறுத்தைகள் வாழ்வதாக ஒன்றிய அரசு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் சிறுத்தை-இணை வேட்டையாடும் விலங்குகள் மற்றும் பெரிய தாவர விலங்குகளின் தற்போதைய நிலை என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவில் 20 மாநிலங்களில் உள்ள புலிகளின் வாழ்விடங்களாக கண்டறியப்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, புலிகள், சோம்பல் கரடிகள், சிறிய பூனைகள், மற்றும் வனவிலங்குகளின் நிலை குறித்து நிபுணர் குழுக்கள் மூலம் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமாக வனப்பகுதிகளில் 26,838 கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்களில் 3,48,58,623 வனவிலங்குகளின் படங்கள் பதிவாகின. இதில் 51,777 படங்கள், சிறுத்தைகளின் படங்கள் ஆகும்.

இதுபோல தமிழ்நாட்டில் 14 சரணாலயங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் மூலம் 629 சிறுத்தைகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 46 வனப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு, எடுக்கப்பட்ட பதிவுகளில் 6757 சிறுத்தைகளின் படங்கள் கண்டறியப்பட்டு, அதில் 1681 பெரிய சிறுத்தைளும், 32 குட்டிகளும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டன. 5240 பெரிய சிறுத்தைகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்தியாவில் புலிகள் வாழ்விடங்களில் சுமார் 12,852 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய மேற்கு தொடர்ச்சி மலை வழி நில அமைப்பில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் வன சரணாலயத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சிறுத்தைகள் நெருக்கடியான பகுதியில் வாழும் இடத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 100 சதுர கி.மீட்டருக்குள் 21 சிறுத்தைகள் வரை வாழ்வது தெரியவந்துள்ளது. ஆய்வின் படி தமிழகத்தில் 868 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 815 சிறுத்தைகளும், இந்தியாவில் 2487 சிறுத்தைகளும் இருந்துள்ளன.

தற்போது 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் சுமார் 3387 சிறுத்தைகள் இருப்பதாக, கனக்கிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014ம் ஆண்டில் பரம்பிகுளம் புலிகள் சரணாலயம், பெரியார் புலிகள் சரணாலயம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் சிறுத்தைகளின் வாழ்விடம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது முதுமலை புலிகள் சரணாலயம், முக்குருத்தி தேசிய பூங்கா, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய வனப்பகுதிகள் சிறுத்தைகள் வாழ உகந்த இடமாகவும், அதன் மூலம் அவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 332 இடங்களிலும், கோவை வனவிலங்குகள் கோட்டத்தில் 67 இடங்களிலும், ஈரோடு கோட்டத்தில் 366 இடங்களிலும், கூடலூர் கோட்டத்தில் 105 இடங்களிலும், கன்னியாகுமரி வனவிலங்குகள் சரணாலயத்தில் 43 இடங்களிலும், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் 316 இடங்களிலும், கொடைக்கானல் சரணாலயத்தில் 152 இடங்களிலும், மேகமலை சரணாலயத்தில் 109 இடங்களிலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 391 இடங்களிலும், முக்குருத்தி தேசிய பூங்காவில் 44 இடங்களிலும்,

நெல்லை சரணாலயத்தில் 81 இடங்களிலும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 707 இடங்களிலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சரணாலயத்தில் 136 இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆய்வு மேற்கொண்டதில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 100 சதுர கி.மீ பரப்பளவில் 5.95 சதவீத சிறுத்தைகளும், கோவை வனவிலங்குகள் கோட்டத்தில் 8.35 சதவீத சிறுத்தைகளும், ஈரோடு கோட்டத்தில் 7.39 சதவீத சிறுத்தைகளும், கூடலூர் கோட்டத்தில் 13.39 சதவீத சிறுத்தைகளும், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் 10.18 சதவீத சிறுத்தைகளும்,

மேகமலை சரணாலயத்தில் 4.06 சதவீத சிறுத்தைகளும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 12.11 சதவீத சிறுத்தைகளும், முக்குருத்தி தேசிய பூங்காவில் 0.66 சதவீத சிறுத்தைகளும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7.05 சதவீத சிறுத்தைகளும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சரணாலயத்தில் 20.43 சதவீத சிறுத்தைகளும் வாழ்வது தெரியவந்துள்ளது.

Tags : Sri Williptur Sanctuary ,EU government , Field study in 20 states across the country; Sri Villiputhur Sanctuary tops leopard habitat: United Kingdom Study
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்