திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வுக்கூட நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுனர்- 6,  ஆய்வக நுட்புநர்- 6, நுண்கதிர் வீச்சாளர்- 6 பேரும் தேவைப்படுகிறார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>