×

ஆர்.எஸ்.பாரதி 75வது பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆலந்தூர்: திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, நேற்று ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் உள்ள தனது இல்லத்தில் 75-வது பிறந்தநாளை  கொண்டாடினார், அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதி பிறந்த நாளை திமுகவினர் கேக் வெட்டி, இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி சிறப்பாக கொண்டாடினர். அவருக்கு ஏராளமான திமுக மற்றும் காங்கிஸ் நிர்வாகிகள் சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 திமுக சார்பில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி-க்கள் டி.ஆர் பாலு, டிகேஎஸ்.இளங்கோவன், செல்வம், ஏகேஎஸ்.விஜயன்,  எம்எல்ஏ-க்கள் பல்லாவரம். இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, நீலமேகம், கிருஷ்ணசாமி, காரப்பாக்கம் கணபதி, எழிலரசு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், கண்டோன்மெண்ட் டி.பாபு, எம்எஸ்கே.இப்ராஹிம், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.,பூபாலன், கீதா ஆனந்தன்,  பல்லாவரம் ஜோசப், கோல்டு பிரகாஷ், கோவிலம்பாக்கம் ரங்கநாதன், சொக்கலிங்கம், மாவட்ட தொண்டரணி செயலாளர் கிரிஜா பெருமாள், பாண்டிசெல்வி, முன்னாள் கவுன்சிலர்கள் ப.முத்து, சத்யா, ஏசுதாஸ், கே.பி.முரளிகிருஷ்ணன், சீனிவாசன், வட்ட செயலாளர்கள் ஜெ.நடராஜன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், இ.உலகநாதன், வேலவன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களுடன் பல்லாவரம் சிவகுமார், சதீஷ், இளைஞரணி பிரவின்குமார், புழுதிவாக்கம் எ.சம்பத், ஜெ.திவாகர், எஸ்.வி.சங்கர், மில்க் சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.காந்த், வழக்கறிஞர் தங்கதுரை, லியோ பிரபாகரன், வெள்ளைச்சாமி, சந்துரு, ஆர்.பாபு, ஜெயக்குமார், கேபிள் ராஜா, ரமணா, பட்ரோடு தியாகு, தினகரன், பிரான்சிஸ், ரமணா, சச்சீஸ்வரி, ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, மாலதி ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத், ஆலந்தூர் மண்டல தலைவர் ஆதம் ரமேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பகத்சிங், நேரு ரோஜா, பி.எஸ்.ராஜ், ஆதம் பிரகாஷ், கோ.சந்தானம், தனசேகரன், பட்ரோடு கோகுலகிருஷ்ணன், நாகராஜ், ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் சீனிவாசன், ராஜசேகரன், ஹார்ட்டின், ரொசாரியோ, வழக்கறிஞர்கள். தி. எழிலரசு, தங்கதுரை, பால.ஆனந்தகுமார், கமல் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : R. S. Bharati ,Stalin , RS Bharathi's 75th Birthday: Congratulations to Chief Minister MK Stalin
× RELATED தோல்வி பயம் வந்துவிட்டதால்தான்...