அரசு கலைக்கல்லூரி அருகே குவிந்து கிடக்கும் கொரோனா கழிவுகள்

உடுமலை: கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது, உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது, பாதிப்பு குறைந்ததையடுத்து, இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிறப்பு வார்டு செயல்பட்டபோது, இங்கு நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள், முகக்கவசங்கள், கையுறைகள், மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, காலி மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை கல்லூரியின் பின்புற காம்பவுண்ட் சுவரையொட்டி கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்த வழியே தினசரி ஏராளமானோர் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்கின்றனர். மருத்துவ கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாததால், நோய் தொற்று பரவும்  அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால், பேராசிரியர்கள் கல்லூரிக்கு வருகின்றனர். விரைவில், நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.எனவே, மருத்துவக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>