அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை : அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் புகாருக்கு பதிலளித்து பேசியுள்ள அவர், 2006,2007ம் ஆண்டு மாநில உற்பத்தியில் இருந்த கடன் 18%ஆக இருந்தது என்றார். அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அந்த கடனை குறைத்தார்.

ஆனால் கடந்த ஆட்சியில் மாநில உற்பத்தி கடன் 27% ஆக உயர்ந்துவிட்டது என்றார். கடந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் மட்டுமல்லாது பழைய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போனதாலேயே கடன் சுமை அதிகரித்து இருக்கிறது என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த ஆட்சியில் 100 விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறை கூறினார்.

Related Stories: