×

15 எம்.பிக்கள் ஆதரவு வாபஸால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் ராஜினாமா

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் வழங்கினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திடீரென்று பதவி விலகி உள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மலேசிய அரசியலில் புதிய குழப்பம் ஏற்ட்டுள்ளது.மலேசிய பிரதமராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றவர் முஹைதீன் யாசின். மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரான இவர், முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரதமரானார். இவரது ஆட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், யாசின் நிர்வாகம் சிறப்பாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சி எம்.பிக்கள் 15 பேர் திரும்பப் பெற்றனர். இதனால் யாசின் நிர்வாகம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில், மலேசிய அரசர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து யாசின் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து உள்ளார். இதனால் 17 மாத கால ஆட்சி மலேசியாவில் முடிவுக்கு வந்தது. யாசின் திடீரென்று பதவி விலகியதால், மலேசியாவில் அடுத்த பிரதமர் யார் என்று குழப்பம் உருவாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் தனது பதவியை மகதீர் மோகமத் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து முகைதின் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் குழப்பங்கள் காரணமாகவும், கூட்டணி கட்சி எம்பிக்கள் 15 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டதால், தற்போது மலேசிய பிரதமர் தனது ராஜினாமா முடிவை எடுத்து உள்ளார்.

Tags : Malaysian ,Muhyiddin Yassin , Malaysian, Prime Minister, Mukaitheen Yassin, resigns
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...