×

ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்ல.. தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் : அமைச்சர் சக்கரபாணி

சென்னை : இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கைகள் மீது இன்று தொடங்கிய விவாதம் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, நிலம் இல்லாதவர்கள் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்தீர்கள் ?. அங்கொன்றும் இங்கொன்றும் நிலம் கொடுத்தீர்கள், முழுமையாக கொடுக்கவில்லை,என்று தெரிவித்தார்.

 இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக் கொடுத்தது திமுக அரசு என்றார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டும் என சொல்றீங்க” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவுத்துறை  அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.


Tags : Minister ,Chakrabarty , எடப்பாடி கே.பழனிசாமி
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...