15 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் 15 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை ஆகஸ்ட் 1ம் தேதி மூடப்பட்டது. ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்னீ தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர். அதேநேரத்தில்  அக்னீ தீர்த்த கடற்கரையில் முகக்கவசம் அணியாமல் தர்ப்பணம் கொடுத்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனை கண்ட மற்ற பக்தர்கள் அவசரகதியில் முகக்கவசங்களை எடுத்து அணிந்து கொண்டனர். கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More