×

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

பெங்களூரு: ஓலா நிறுவனம், எஸ்1மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நேற்று அறிமுகம் செய்தது. ஓலா நிறுவனம் நேற்று தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என 2 மாடல்களில் இந்த ஸ்கூட்டர்கள் வெளிவருகின்றன. ஓலா எஸ்1, 5 வண்ணங்களில் கிடைக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 121 கி.மீ வரை செல்லலாம். 3.6 நொடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ செல்லலாம். இதில், நார்மல், ஸ்போர்ட் என 2 டிரைவிங் மோட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக, பேம் திட்ட மானியத்துடன் டெல்லியில் ரூ.85,099, குஜராத்தில் ரூ.79,999, மகாராஷ்டிராவில் ரூ.94,999, ராஜஸ்தானில் ரூ.89,968 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் சுமார் ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், ஓலா எஸ்1 புரோ, 10 வண்ணங்களில் கிடைக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கி.மீ வரை செல்லலாம். 3 நொடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டலாம். அதிகபட்சமாக மணிக்கு 115 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். இதில், நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைபர் என்ற 3 டிரைவிங் மோட்கள் உள்ளன. இது, பேம் மானியத்துடன் டெல்லியில் ரூ.1,10,149, குஜராத்தில் ரூ.1,09,999, மகாராஷ்டிராவில் ரூ.1,24,999, ராஜஸ்தானில் ரூ.1,19,138 எனவும், பிற மாநிலங்களில் ரூ.1,29,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஆக்டோகோர் பிராசஸருடன் கூடிய 7 அங்கல தொடுதிரை, வைபை, புளூடூத், 4ஜி இணைப்பு மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் உள்ளன என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Ola , Introducing Ola Electric Scooters
× RELATED ஓலா, உபெர், வாடகை கார் உள்ளிட்ட அனைத்து...