×

நேஷனல் பேங்க் ஓபன் பைனலில் கமிலாவுடன் பிளிஸ்கோவா மோதல்

மான்ட்ரியால்: கனடாவில் நடைபெற்று வரும் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தாலி வீராங்கனை கமிலா ஜார்ஜியுடன் செக் குடியரசு நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா மோதுகிறார். முதலாவது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதிய கமிலா 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்தது. 2வது அரை இறுதியில் கரோலினா பிளிஸ்கோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த பிள்ஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் கமிலா - பிளிஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மெட்வதேவ் அசத்தல்: இதே தொடரின் ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை மிக எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 54 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2வது அரையிறுதியில் அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்கா 6-7 (2-7), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் முன்னணி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசை (கிரீஸ்) 2 மணி, 32 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பைனலில் மெட்வதேவ் - ஒபெல்கா மோதுகின்றனர்.


Tags : Bliskova ,Camila ,National Bank Open , Bliskova clashes with Camila in the final of the National Bank Open
× RELATED சாம்பியனை வீழ்த்திய கமீலா