புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் 75வது சுதந்திர தினவிழா நேற்று கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில்  கொண்டாடப்பட்டது. காலை 9.05 மணிக்கு காந்தி சிலை அருகே முதல்வர் ரங்கசாமி தேசியகொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றினார். தொடர்ந்து, சுதந்திர தின பேரூரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். ஏப்படி தொழிற்சாலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை நிலை நிறுத்த மக்கள் தங்களது ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார்.

Related Stories:

>