×

கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் நடந்தது ; நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா: கலெக்டர்கள் தேசிய கொடியேற்றினர்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று நாட்டின் 75வது சுதந்திரதினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலெக்டர்கள் விஷ்ணு, கோபாலசுந்தரராஜ், செந்தில்ராஜ் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் சுதந்திரதினவிழா நடந்தது. நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 75வது சுதந்திரதினவிழா கோலாகலமாக இன்று நடந்தது. இதில் கலெக்டர் விஷ்ணு தேசியக் கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கிருபாகரன் தலைமையில் எஸ்.பி மணிவண்ணனுடன் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 18 பயனாளிகளுக்கு 35 லட்சத்து 5 ஆயிரத்து 755 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் காவல்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துரை அரசு அலுவலர்கள் 194 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின்  கலைநிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. அதே போல சுதந்திர தின விழா  கொண்டாட்டங்களை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை. அரசு அதிகாரிகள்,   போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டிருந்தது. இவர்களும் முக கவசம் அணிந்து, கொரோனா பாதுகாப்பு  நெறிமுறைகளை பின்பற்றி விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு, எஸ்.பி. மணிவண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணன், துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுதந்திர  தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட முக்கிய  இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

75வது சுதந்திரதினவிழாவையொட்டி மூவர்ண பலூர்களை கலெக்டர் விஷ்ணு பறக்க விட்டார். சுதந்திரதின விழாவை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பு அடுக்கு மாடிகுடியிருப்பிலிருந்து காவலர்களின் குடும்பத்தினர் கண்டு களித்தனர். முன்னதாக விழா மைதான நுழைவுவாயிலில் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டு, வெப்ப பரிசோதனை நடந்தது. அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி விழாவில் கலந்து கொண்டனர்.

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா இன்று காலை ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. காலை 9 மணிக்கு எஸ்.பி கிருஷ்ணராஜ் வருகை தந்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வருகை தந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர். சரியாக ஒன்பது மணி ஐந்து நிமிடங்களுக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் சமாதானப்புறா, மூவர்ண கொடியின் வர்ணத்தில் அமைந்த பலூன் ஆகியவற்றை பறக்கவிட்டார்.

அதன் பிறகு காவல் துறையை சேர்ந்த 15 நபர்கள், உதவி இயக்குனர் ஊராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த 10 நபர்கள், நகராட்சியை சேர்ந்த 10 நபர்கள், பேரூராட்சிகள் சேர்ந்த 10 நபர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் துறையைச் சேர்ந்த ஐந்து நபர்கள், இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் 5 நபர்கள் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள், 108 ஆம்புலன்ஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு நபர்கள், சித்தமருத்துவர் பிரிவை சேர்ந்த 3 நபர்கள், வருவாய் துறையை சேர்ந்த ஆறு நபர்கள், ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஆறு நபர்கள், தென்காசி அரசு மருத்துவமனையை சேர்ந்த ஒருவர், செங்கோட்டை அரசு மருத்துவமனையை சேர்ந்த ஒருவர்,  என மொத்தம் எழுபத்தி எட்டு நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதிக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரியும் தனியார் மருத்துவமனை சாந்தி பன்னோக்கு மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தனுஷ் குமார் எம் பி மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் பழனி நாடார் எம்எல்ஏ மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சமீம் இப்ராஹிம், திட்ட இயக்குனர் சரவணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரம், குழந்தை மணி, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், இலஞ்சி, குற்றாலம், மேலகரம், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறையினர் கலந்து கொண்டனர் நோய்த்தொற்று காலமாக இருப்பதால் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஒன்பது முப்பத்தி ஐந்து மணிக்கு அதாவது மிகச் சரியாக 30 நிமிடங்களில் தேசிய கீதம் இசைக்க விழா நிறைவு பெற்றது.

தூத்துக்குடி
தூத்துக்குடி தருவை மைதானத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு  பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி ஜெயக்குமார், டிஆர்ஓ கண்ணபிரான், உதவி கலெக்டர் சரவணன், பயிற்சி சப்கலெக்டர் நாராயணன், ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஏடிஎஸ்பி இளங்கோ, டிஎஸ்பிக்கள் கண்ணபிரான், கணேஷ், பொன்னரசு, சங்கர், தாசில்தார் ஜஸ்டின் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசு விதிமுறைகளின்படி கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. சுதந்தினத்தையொட்டி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ேசர்மன் ராமச்சந்திரன், தேசிய கொடியேற்றினார். மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சாரு, தேசிய கொடியேற்றினார்.


Tags : Nelai ,Nilasai ,Diathathathathuthadam , Took place without artistic performances; Independence Day at Nellai, Tenkasi, Thoothukudi: Collectors hoisted the national flag
× RELATED மாதம் 3 உயிரிழப்புகள் தொடர்கதையாகிறது...