×

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: மெட்வெடேவ், பிளிஸ்கோவா இறுதி போட்டிக்கு தகுதி

மான்ட்ரியல்: கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் (ரோஜர்ஸ் கோப்பை) தொடர் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி போட்டிகள் இன்று அதிகாலை நடந்தது. ஆடவர் ஒற்றையரில் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவ் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்-அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா மோதினர். இதில் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஓபெல்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் பைனலில் மெட்வெடேவ்-ரெய்லி மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் அரையிறுதியில், முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் ஆர்யனா சபலென்கா, 4ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவா வெற்றிபெற்றார். இன்று நடந்த 2வது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 3-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில், இத்தாலியின் கமிலா ஜியோர்கி வீழ்த்தினார். நாளை நடைபெறும் பைனலில் பிளிஸ்கோவா-கமிலா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.



Tags : Rogers Cup Tennis ,Medvedev ,Bliskova , Rogers Cup Tennis: Medvedev, Bliskova qualify for the final
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்