×

கொற்கையில் அகழாய்வு பணியில் 3 அடி தானிய சேமிப்பு கொள்கலன் கண்டெடுப்பு

ஏரல்: தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் 52 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள், கடந்த பிப்.26ம் தேதி தொடங்கி 6 மாதமாக நடந்து வருகிறது. கொற்கை பாண்டிய மன்னனின் தலைநகராகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிபத் தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான பொருட்கள், கடந்த ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுடெடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொற்கை ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் 3 அடி உயர கொள்கலன் இப்போது கிடைத்துள்ளது. இது 2000 ஆண்டுக்கு முன் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதை திறந்த பிறகே உள்ளே என்ன தானியங்கள் இருக்கும் என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags : Korkai , Discovery of a 3-foot grain storage container during excavations at Korkai
× RELATED கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்