×

லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் சண்டையிட்ட 20 வீரர்களுக்கு வீர தீர பதக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு துணிச்சல் மற்றும் வீரத்துடன் செயல்பட்ட பல்வேறு ஒன்றிய மற்றும் மாநில காவல் படையில் பணியாற்றி வருபவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் பதக்கம் வழங்கப்படும். அதன்படி, ஒன்றிய அரசு 1,380 பேருக்கு பதக்கங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வீரதீரத்திற்கு 2 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம், 628 பேருக்கு காவலர் வீர பதக்கம், புகழ் பெற்ற சேவைக்காக 88 பேருக்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்காக 662 பேருக்கு காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டர் அமர் தீப் மற்றும் மறைந்த தலைமை காவலர் காலே சுனில் தத்தாத்ரய்யா இருவரும் மட்டுமே வீரத்தீரத்திற்கான ஜனாதிபதி போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிது. இதேபோல், துணிச்சல் மற்றும் வீரத்திற்காக இந்திய - திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த 23 பேருக்கு வீரதீர பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மே - ஜூன் 2020 லடாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல் துணிச்சல் மற்றும் வீரத்துடன் சண்டையிட்ட 20 பேருக்கு, மாவோயிஸ்டுக்களுடன் போராடிய 3 பேருக்கு வீரதீர பதக்கங்கள் வழங்கப்பட்ட உள்ளன. இவர்களுக்கான பதக்கங்கள் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளன.

Tags : Ladakh ,United States Government , 20 heroes who fought with Chinese soldiers on the Ladakh border: United States Government Announcement
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...