கர்நாடகாவில் கனமழை 4 அணைகள் நிரம்பின

பெங்களூரு: கர்நாடகாவில் ஜூலை கடைசி வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் தாக்கம் காரணமாக மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளவான 2,284 அடியை எட்டியது. மண்டியா மாவட்டம்,  கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 124.80 அடி உயரம் கொண்ட அணையில் 122.45 அடிக்கு தண்ணீர் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,896 கனஅடியாகவும் வெளியேற்றம் 5,482 கனஅடியாகவும் இருந்தது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி அணை நிரம்பியுள்ளது. 2,859 அடி உயரம் கொண்ட அணையில் 2,858.10 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஹாசன் மாவட்டத்தில் ஹேமாவதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. 2,922 அடி உயரம் கொண்ட அணையில் நேற்றைய நிலவரப்படி 2,921.41 அடி தண்ணீர் இருந்தது. நான்கு அணைகளும் நிரம்பியுள்ளதால், தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீர் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>